கைக்குள் கொண்டுவந்தால்
இழப்பு இருவருக்குமே!
பாதுகாப்பு என்பது
உன் முடிவுகளில்
நான் இருக்கேன் என்பது!
சிறை வைப்பது இல்லை...
இருட்டறைக்குள்
புல்லினமும் முளைப்பதில்லை...
மூடிய குப்பிக்குள்
விளக்கும் எரிவதில்லை....
இயற்கை உயிர்வளி
பரவிக்கிடக்க
செயற்கை உள்வளி
எதற்கு?
விட்டுப் பாருங்கள்
பாரம் குறையும்
பட்டாம்பூச்சியாய் பறக்கும் மனசு
இருவருக்குமே!
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment