Thursday, December 12, 2024

யார் மீது கோவம்அடம்பிடித்து விடாமல் கொட்டுகிறது அடைமழை!

யார் மீது கோவம்
அடம்பிடித்து விடாமல் கொட்டுகிறது 
அடைமழை!

பெங்கால் கலவரத்தில்
சிக்கிய மேகங்கள்
வடிக்கிறது கண்ணீர்!

தாகங்கொண்ட பூமிக்கு
மோகங்கொண்டு பொழியும் காதல்
விடாது மழை!

கொடுத்து வாங்கல் பழக்கம்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
உறிஞ்சியதைத் கொட்டுகிறது மழையாக!

கருக்கொண்ட மேகத்தின்
பனிக்குடம் உடைந்தது
நிற்காமல் சொட்டுகிறது உதிரம்!

நுதல்விழி
இராணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...