ஓரம் தள்ளிவிட்டு
ஓரவிழி நோக்கி
கண்களால்
ஆரத் தழுவிக்கொள்ள
காரணம் ஏனடி?
சகியே....
மழைத்துளியில்
மங்களான கண்ணாடிக்குள்
மங்களாக நான் ஒளிந்திருக்கும்
மனசு புரியாமல் இல்லை!
விழியோரம் கொஞ்சம் எனக்கான
நீர்த்துளி
வழித்துணையாய் வர
மறுப்பது ஏனடி?
சகியே...
சொல்லத்துடிக்கும் இதழ்களையும்
சொல்லவிடாமல் தடுக்கும் மனதினையும்
என் உள்ளம் அறியுதடி!
காரணம் அறிந்தால்
கொஞ்சம் சமாதானம் ஆவேன்!
அது தெரியாமல் போவதால்
நானே காரணம் ஆவேன்!
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment