Thursday, December 12, 2024

மஞ்ச நிறத்தவளோடுமஞ்ச வெயில் போட்டிதோல்வியை தாங்காமல்நீர்நிலையில் குதித்துதற்கொலை!

மஞ்ச நிறத்தவளோடு
மஞ்ச வெயில் போட்டி
தோல்வியை தாங்காமல்
நீர்நிலையில் குதித்து
தற்கொலை!

கருங்கூத்தலைக் கண்டு
கருமேகம் வெட்கப்பட்டு
மஞ்ச வெயிலில் 
கண்ணாம்பூச்சி!

கிளைகளை நீட்டிக் காத்திருக்கின்ற 
பூக்கள்...
அவளின் கூந்தலில் குடிபுக...
இல்லையேல்,
அவளின் பாதத்தில் அடிபணிய...

சேலை கட்டும் பெண்ணின் வாசத்தில்....
இந்த மலர்களின் வாசம் எடுபடுமா?
ஏக்கத்தில் தலைகுனியும் கிளைகள்!

நுதல்விழி

1 comment:

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...