தீண்டல் இல்லாமலே
முடிவு வரை!
நெருக்கத்தை நீட்டுகிறது
பயணியர் வசதிக்காக
அகலப் பாதை திட்டம்!
பலகைகள் இணைக்கிறது
ஆனாலும்
பயன் என்ன?
நகர்ந்து நெளிந்திடக் கூடாதாம்
வலுவான தண்டவாளத்தில்
சிறுகற்கள்!
பிறர் வாழப் பிரிகிறோம்
நன்றி மறவாமல் இருப்பதே
நன்று!
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment