Saturday, December 21, 2024

இழப்பதற்கு என்ன இருக்கிறது?அனைத்தையும் இழந்த பிறகு!

இழப்பதற்கு என்ன இருக்கிறது?
அனைத்தையும் இழந்த பிறகு!

தொலைப்பதற்கு என்ன இருக்கிறது?
வாழ்க்கையே தொலைந்த பிறகு!

வெளிச்சத்திற்கு என்ன இருக்கிறது?
இருளின் ஆட்சிக்குப் பிறகு!

கொடுப்பதற்கு என்ன இருக்கிறது?
கொட்டிக் கவிழ்த்த பிறகு!

தடுப்பதற்கு என்ன இருக்கிறது?
தடுக்கி விழுந்த பிறகு!

பிடிமானம் என்ன இருக்கிறது?
தூணே சரிந்த பிறகு!

சாதிக்க என்ன இருக்கிறது?
சரிந்து கிழிந்த பிறகு!

சோதிக்க என்ன இருக்கிறது?
சேற்றுக்குள் சிக்கிய பிறகு!

நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...