Thursday, December 12, 2024

ஏது நீயும் வந்தாய்தூது செல்ல...மாது மனசு படும்பாடுஓது அவன் காதில்!

ஏது நீயும் வந்தாய்
தூது செல்ல...
மாது மனசு படும்பாடு
ஓது அவன் காதில்!

போதும் உந்தன் புலம்பல்
மோது நேரில் நின்று...
கோதும் விரலால் வருடி
காது மடலில் பேசு!

நெல் மணிகளைத் தருகிறேன்
சொல் மாலை அணிந்திடு...
பழுத்த பழம் தருகிறேன்
அழுத்தமாக சொல்லிடு....
சோற்றுப் பருக்கைத் தருகிறேன்
தோற்று மட்டும் வராதே....
பிடித்த உணவைத் தருகிறேன்
மடித்த கடிதம் கொடுத்திடு..

நுதல்விழி
ராணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...