இருளில் ஒளி
இயற்கை தந்த விழி
கடலைக் கடந்து
விண்ணைத் தாண்டி
வீற்றிருக்கும் குறள் நாதன்!
கன்னிக் குமரி கண்ட
மன்னிய திகழொளி...
விட்டுச் சென்ற லெமுரியாவை
மீட்டுத் தந்த குறள் நாயகன்!
எட்டுத் திக்கும் மட்டுமல்வ
தசரதனைப் போல்
பத்துத் திக்கும்
பதியம் போட்ட
குறள் தலைவன்!
எஞ்சிய மிச்சங்களை
பஞ்சம் இல்லாமல்
சொல் ஏட்டில் மட்டுமின்றி
கல்வெட்டில் பொறித்த
அற்புதக் கலைஞன்!
தன்னை தான் செதுக்காமல்
தன்னைச் சார்ந்தவரையும்
செதுக்கொள்ளச் செய்த
படைப்பின் ஆசான்!
நுதல்விழி
இரணிப்பேட்டை
No comments:
Post a Comment