Thursday, December 12, 2024

வெள்ளை ரோசா முகம் கழுவினாள்

வெள்ளை ரோசா முகம் கழுவினாள்
கலங்கிய நீர் தெளிந்து...
தெளிந்த நீரைக் கண்டு
ஆதவன் முகம் பார்க்கிறான்...
அடுத்த கணம்
ஆதவனும் ரோசாவும் 
கண்ணொடு கண் நோக்கின...
காதல் பிறந்தது அங்கே,
புது வெளிச்சம் பிறந்தது இங்கே,
வாழ்த்துக் கூற
சில நீர்த்துளிகள்....
வெட்கத்தில் கொஞ்சம்
அதிகமே தலை குனிந்தாள் ரோசா...
சற்று தடுமாறிக் 
தலை கவிழ்ந்தது செடியும்...
அழகான காதல் படம்,
அமைதியாய் செல்கிறது...
இயற்கையும் ஏற்கிறது
ஈர்ப்பில் உலகமே இரசிக்கிறது...
உவப்பில் இரண்டும் தத்தளிக்க...
ஊஞ்சல் சேவையில் தென்றல்...
எண்ணச் சிறகை விரிக்க
ஏகாந்தம் கிடைத்தது 
ஐயோ, என ஒரு வெட்கம்
ஒப்பனைக்கு கண்ணாடி நதிநீர்
ஓய்வு இனி இரவினிலே
தொடரும் காதல்
அடுத்த விடியலினிலே!

நுதல்விழி
இராணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...