பூவும் பொட்டும்
பிறப்பில் வந்தது...
இடையில் வந்தவன்
பறித்தது ஏனோ?
தாலியும் மெட்டியும்
இடையில் வந்தது....
இடையில் வந்தவன்
கொண்டு செல்லட்டும்....
தாலிக்கும் மெட்டிக்கும்
பூவும் பொட்டும்
வட்டி ஆகுமா?
அவள் அலங்கோலம் அல்ல....
அவளும் எழுற்கோலமானவளே!
அவள் தடைக்கல் அல்ல...
அவளும் விடைக்குரியவளே!
அவள் அடையாளம் அல்ல...
அவளும் அழகானவளே!
அவள் முட்செடி அல்ல...
அவளும் முழுமதியே!
அவள் சிறைக்கைதி அல்ல...
அவளும் சிந்தனைக்குரியவளே!
நுதல்விழி
இராணிப்பேட்டை

No comments:
Post a Comment