வண்ணச் சாயம் பூசும் இதழிலா?
கண்ணம் மினுக்கும் சுண்ணப் பொடியிலா?
அடர்மிகு காட்டும் கருமை இமையிலா?
படர்நெற்றி மெல்லியதாய் தீட்டிய புருவத்திலா?
சுருண்ட கூந்தலிலா: நிமிர்ந்த கூந்தலிலா?
கருத்த கூந்தலிலா: சாயம்பூசிய கூந்தலிலா?
நீண்ட கூந்தலிலா: வெட்டி கூந்தலிலா?
அடர் கூந்ததிலா மெல்லிய கூந்தலிலா?
படர் முகத்திலா பட்டு முகத்திலா?
வட்ட முகத்திலா நீண்ட முகத்திலா?
இளமார்பைக் காட்டும் பாவாடை சட்டையிலா?
இடையைக் காட்டும் பாவடை தாவணியிலா?
அங்கத்தை பிரதிபலிக்கும் இருகிய உடையிலா?
எதில் உள்ளது என்று தெரியாமல்...
சின்னா பின்னமாக்கப்படுகிறது
அன்றலர்ந்த மலர்கள்
காம இச்சையின் நரிக் கூட்டத்திற்குள்...
அவளை மனதார மகிழ்வித்துப் பார்!
அகமும் முகமும் சிரிக்கும் சிரிப்பில்...
கண்களும் இதழ்களும்
புன்னகைக்கும் அழகில்....
கசக்கி எறிய வேண்டாம்
கைகளில் தாங்க வேண்டாம்
கொஞ்சம் வாழவிட்டால் போதுமே!
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment