Saturday, December 21, 2024

இறைவனின் எச்சரிக்கை

இறைவனின் எச்சரிக்கை

அகழ்வாரைத் தாங்கித் தாங்கி
புகழ் மங்கி நிற்குது நிலம்!
பதிலடி தந்தது பூகம்பம்!

அழுக்கு மனம் கொண்ட
கருப்பு பணங்களால்
சாக்கடையானது நீர்!
எதிர்க்க வந்தது சுனாமி!

புகைப்பார் வீசிய தீயில்
கருகி வீணாணது காடு!
பரபரன்னு பரப்பியது வைரஸ்!

பொறுப்பற்ற ஆட்சியில்
குறுக்குவழி பணக்காரனால்
நாசமானது காற்று!


வேற்று கிரகத்தில்
வீடு அமைக்க
சிதைக்கப்பட்டது ஆகாயம்!
புற ஊதாக்கதிர் தாக்கம்!

நுதல்விழி
இராணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...