Saturday, December 21, 2024

களவாணி!

களவாணி!

காணாமல் போன பிறைநிலா
அவளின் நுதல் ஆனதோ?
தொலைந்து போன நட்சத்திரத் தோட்டம்
அவள் விழித்திரையில் ஒளிந்ததோ?
மறைந்து போன வால் நட்சத்திரம் 
அவள் நாசியில் அமர்ந்ததோ?
செவ்வானத்தின் சிவப்புகள்
இதழ் துடிப்பில் இணைந்ததோ?
வட்டநிலா வழிமாறி
அவள் வதனத்தில் புகுந்ததோ?
என்னை களவாடிச் சென்றவள்
விண்ணையும் விட்டு வைக்கவில்லை!

நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...