Saturday, December 21, 2024

விதிக்குள் முடங்கினால்வீதியில் இறங்கி நடப்பேன்!

விதிக்குள் முடங்கினால்
வீதியில் இறங்கி நடப்பேன்
சதிக்குள் சிக்கினாலும்
சோதனை வென்று முடிப்பேன்!
மதியே மயங்கினாலும் வினையை
மறவாமல் நடத்தி கடப்பேன்!
புதிய மாற்றங்களுக்கு இடையே
பாதை வகுத்து காட்டுவேன்!
எதிரியையும் இரவில் வெல்வேன்
உதிக்கும் முன் உலகத்தில்!

நுதல்விழி

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...