Saturday, December 21, 2024

வாடா மல்லியின் வண்ணம் திருடிமெல்ல இதழ் விரிக்கும்மெல்லிய மலரே...

வாடா மல்லியின் 
வண்ணம் திருடி
மெல்ல இதழ் விரிக்கும்
மெல்லிய மலரே...
கன்னம் சிவக்கும்
வெட்கத்தை மறைக்க...
சின்ன முறுவலில்
சிதைத்திடலாமா?
நாணலாய் நீண்ட
மெல்லியத் தண்டில்....
நாணம் மறைக்கும்
புதிய முயற்சியோ?

பசுமை மாறும் 
இலையும் கூட...
இதழாய் விரித்து
சிரிப்பது ஏனோ?

நுதல்விழி
இராணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...