நீ....
ஏதோ ஒன்று
எனக்குள் நுழைந்து
தூங்கா இரவை
நீளச் செய்ய...
காதோடு இரகசியம்
எனக்குள் பேச
யாரும் அறியாமல்
நெஞ்சுக்குள் பூட்ட.....
கோதிடும் விரல்
உனதாக இருக்க
கற்பனை உலகில்
கலந்த காதல்....
சேதிகள் யாவும்
தூதாக உரைக்க
தோதாக எனக்கு
யாரும் இல்லையே...
சோதிக்கும் ஆற்றல்
எனக்குள் உண்டு
மீண்டும் உன்னை
காணாத வரைக்கும்....
தீதொன்று என்னை
நெருங்காமல் காக்க
நானுண்டு என்று
நீ இருந்திட....
போதாத காலம்
துரத்தி அடிக்க
நீ வந்து என்னைத்
தாங்கிப் பிடிக்க....
மாறாத காதல்
எனக்குள் மறைக்க
மன்னிக்க வேண்டும்
உன்னில் மறைக்க....
உனக்கான வாழ்க்கை
உன்னிடம் இருக்கு
இடையில் வந்து
தடுக்க மாட்டேன்...
உன் நலனில்
எனக்கு எப்போதும்
அக்கறை உண்டு
அதை நீ மறுக்காதே...
உரிமை இல்லை
உணர்வு இருக்கு
ஒருமையில் உன்னை
அழைக்க விழைய....
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment