மேலோட்டமாய் பார்த்து
மெய் என எண்ணி,
சற்றும் சிந்தியாமல்
எப்படி இது?
அவசரத்தில், சரியெனச் சொல்லி
சட்டென நகரும்
சாமானியன் வாழ்க்கை....
நின்று நிதானித்து
கொஞ்சம் மறுபக்கம் ஆராய்ந்து
தலைகீழ் விதியை
தப்பில்லாமல்
இப்படித்தான் என்று எண்ணி
வியந்து பார்க்கும் கண்களே
கலைஞன்!
ஒளிப்படக் கலைஞனின்
கைவண்ணத்தில்
நோக்குவோரின்
நிழற்படக் கருத்துக்கு
சவாலான பதிலடி
எத்தனைபேர் எதிர்கொள்வர்
உண்மையை உணர...
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment