Monday, December 16, 2024

குடுகுடுப்பைக்காரனின்ஜக்கம்மா வாக்கும்.....


குடுகுடுப்பைக்காரனின்
ஜக்கம்மா வாக்கும்.....
பனி மழையை வரவேற்க
கொட்டும் பனியிலும்
குனிந்து நிமிர்ந்து
ஒரு யோகாசனமும்...
வண்ணப் பொடி அலங்காரத்தில்
கைவண்ணக் கலையும்....
தீபங்களும் கோலங்களும்....
பஜனைப் பாடகர்களின்
மார்கழிப் பாவைப் பாடலும்
கன்னிப் பெண்கள் வாசலில்
பூசணிப்பூ வரவைக் குறிப்பும்...
பாவையரின் பாவை நோன்பும்...
மார்கழி நிறையில்
ஒட்டடை ஒழிப்பும்....
சுவர்களில் வண்ணக் கலவை 
அலங்காரமும்
போகியில் பழயன கழிதலும்
கொண்டாடி...
சூரியனை வரவேற்கும் 
பொங்கல் திருநாளில் வரவேற்பு
மார்கழி மாக்கோல அடையாளம்!

நுதல்விழி
இராணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...