குறை ஒன்று உண்டு
காலைக் கண்நோய்!
கடந்தே போகிறேன் காலங்களை....
இருப்பதில் நிறைவு கொண்டு
இரவு உலகத்தில்
நான் மட்டுமே நகர்வலம் வந்து....
விண்மீன்கள் நீந்துவதையும்
பால்வீதி நட்டசத்திர தோட்டத்தையும்...
இருளில் உலாப்போகும்
குட்டிக் குட்டியான வெண்மேக ஊர்வலம்...
அப்பழுக்கற்ற தூய காற்றை உள்வாங்கி...
துப்பரவான இடங்களில்
சத்தமில்லா யுத்தமில்லாத
அமைதி மாநாட்டில்...
எனது ஒத்த ஓசை மட்டுமே
அலறலாக நினைத்தால்
நீங்கள் நினைத்தால்
நான் என்ன செய்வேன்?
எங்கள் மகிழ்ச்சியன் ஆர்ப்பரிப்பு...
மது இல்லை; சூது இல்லை
எங்களின் மகிழ்ச்சியான
இரவு உலகத்தில்!
நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்
No comments:
Post a Comment