அடைக்கலம் தந்தாய்(காய்ந்த மரம்)
இயற்கையும் ஈரம் கசிந்தது
பசுமை மண் (பாசிகள்) பிறந்தது
உறைவிடம் ஆனது!
உறங்கத் தொடங்கினேன்!
தூய அன்பில்
துளிர்த்துக்கொண்டேன்!
நன்றி காட்டினேன்
பூக்களாய் மலர்ந்து!
பட்டமரம் பசுமையானது
விட்டகுறை தொட்டகுறை உறவில்!
இனம் இனத்தில் மாறுபட்டாலும்
புல்லினத்தினத்தில் ஒன்றுபட்டு நின்றுது!
மனித இனம்
எப்போது படிக்கும்?
இயற்கை பாடத்தை....
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment