முகர்ந்து கொண்டு சென்றது உன்னை!
வட்டநிலாவோடு ஒப்பிட்டாலும்
வண்ணநிலா உன்னோடு ஈடாகுமா?
வண்ண மலர்களை நாடும் வண்ணத்துப் பூச்சியும்
மேகத்தைப் பார்த்து மயக்கம் கொண்டதோ?
கடலை நாடும் நதியும்
கணநேரத்தில் நிலைகுலைந்து நின்றதோ?
வானில் ஒரு மாற்றம்
வண்ணமயில் தோற்றம் ஒட்டிக்கொண்ட நிழலோ?
பிரபஞ்சமே மயக்கத்தில்
பிரம்மன் வடித்த ஓவியமே உன்னால்!
வெண்மேகம் கூட பொன்மேகம் ஆனது
மஞ்ச நிறத்தவளே உனது மயக்கத்தில்!
வானில் தோன்றும் எட்டாவது அதிசயம்
எட்டா தூரத்தில் நின்றாயோ?
நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்
No comments:
Post a Comment