ஒளி மழையில்
களி நடனம் புரியும் சாலைகள்....
மௌன மயக்கத்தில்
இரவின் நீலாம்பரி....
இராப்பொழுது காட்சி
நாட்பொழுதும் நீளாதோ?
அமைதியான சாலை கூட
காட்சிக் கூடம் ஆனதே!
விட்டு விட்டு ஒளி மீட்டும்
மின்மினி கூட
வெட்கப்பட்டு காணாமல் போனதோ?
பனிச்சாரலா? மழைச்சாரலா?
உன்னோட பிம்பத்தில்
புரியவில்லை ஒளிச்சாரலே?
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment