ஒற்றைத் தாமரை
மழையில் கரைந்ததால்
செந்தாமரை வெண்தாமரை ஆனதா?
ஆதவனைக் காணாது
வெளுத்துத்தான் போனதோ?
நடுநடுங்கும் குளிரில்
உறைந்துதான் போனதோ?
மழைச்சாரல் மயக்கத்தில்
மெய்மறந்து நின்றதோ?
ஊசிபோல் குத்தும் மழையில்
உணர்ச்சி அற்றுப் போனதோ?
தனிமை தந்த பயத்தில்
தவித்து தான் நிற்குதோ?
நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்
No comments:
Post a Comment