Saturday, December 21, 2024

கல்லுக்குள் ஈரம்புல்லுக்கும் பாய்ந்துபூத்துக் குலுங்குதேபல வண்ணங்களில்...

கல்லுக்குள் ஈரம்
புல்லுக்கும் பாய்ந்து
பூத்துக் குலுங்குதே
பல வண்ணங்களில்...

மலர நினைத்தால்
எப்படியும் மலரலாம்...
மறுக்க நினைத்தால்
மரணம் கூட பக்கத்தில்
பாய் போட்டுப் படுக்கும்!

வாழ நினைத்தால்
எப்படியும் வாழலாம்...
வீழ நினைத்தால்
தள்ளிவிட யாரும் வேண்டியதிவ்லை...
துள்ளிக்கொண்டு 
நீயே வீழ்வாய்!

துளிர்க்க துடித்தால்
எப்படியும் துளிர்க்கலாம்...
துவல நினைத்தால்
நஞ்செய் நிலம் கூட
உனக்கு நஞ்சாகத் தெரியும்!


நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...