Saturday, December 21, 2024

கருப்பு பேரழகிகண்ணால் சொல்லும்காதல் கதையைக் கூறு?

கருப்பு பேரழகி
கண்ணால் சொல்லும்
காதல் கதையைக் கூறு?

காந்தவிழி கொண்டு
என்னை ஈர்த்துச் செல்லும்
மாயக் கண்கள்
என்ன என்று கூறு?

கட்டழகியே கொட்டி வைத்த 
முல்லைப் போல சிரிக்கும் 
பற்கள் செய்த விந்தை 
என்ன என்று கூறு?

காதல் காதல் என்று
மௌனமாக உச்சரிக்கும்
வாய்மொழியன் மந்திரம்
என்ன என்று கூறு?

வட்டநிலா கருத்த முகம்
சொட்டுகின்ற ஒளியோ
ஓராயிரம் கற்பனை வடிக்கும்
காவியம் 
என்ன என்று கூறு?

பண்ணு போல 
கன்னம் ரெண்டும்
கதகளி போல்
ஆடும் ஆட்டம் 
என்ன என்று கூறு?

நுதல்விழி
இராணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...