Saturday, December 21, 2024

எண்ணுவதுயர்வு

*எண்ணுவதுயர்வு*

 *இன்னிசை வெண்பா*

இளங்கதிர்க் காலை இளமை வனப்பு!
களத்து நிலத்தில் கனத்த குவியல்!
உளத்து மகிழ்வில் உயர்வு பெருக
வளத்து மனத்தில் வளம்!

துயர்வு தொலையும் தொலைவு நெருங்க!
உயர்வு நினைப்பில் உழைப்புப் பெருக
வியர்வை மழையில் விதிதான் செல்ல
அயர்வு களைய அடை!

பச்சை பசுமை பரவட்டும் பாரினில்
இச்சை தவிர்த்த இயற்கை எழிலை
அச்சம் அழிய அணிநலன் கண்டிட
மிச்ச அழகையும் பேண்!

ஈவு இரக்கத்தை ஈகையில் ஈந்திட
ஏவுகின்ற தன்னல எத்தர்கள் கூட்டத்தில்
தோள்தொட்டுத் துன்பம் துடைக்கும் விரல்களின்
தாள்பணிந்து அன்பை அளி!

ஏழை எளியோர் எதிர்படும் யாவரும்
கீழ்மைக் குணம்நீங்கிக் கண்ணிரக்கம் கொள்ளட்டும்
பார்த்து நலன்மிகப் பாராட்டி அன்பினால்
ஈர்த்திடும் சக்தி யளி!

நுதல்விழி
இராணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...