கண்ணிற்கு மை அழகு
முகத்திற்கு கண் அழகு
அவளுக்கு முகம் அழகு
எனக்கு அவள் அழகு!
கார்கூந்தல் வகிடு அழகு
வகிடெடுத்த தலை அழகு
தலை சுமக்கும் பெண்ணழகு
எனக்கு பெண் அழகு!
கதை பேசும் சிரிப்பழகு
சிரிக்க வைக்கும் பல்லழகு
பல் தாங்கும் வாய் அழகு
எனக்கு அவள்தான் அழகு!
காதோர மயிர் அழகு
மயிர் கோதும் விரலழகு
விரல் கீரீட நகமழகு
நகம் தாங்கும் அவளழகு!
நுதல்விழி
ராணிப்பேட்டை
No comments:
Post a Comment