Saturday, December 21, 2024

கிடைத்த தனிமையும்பிடிக்க பழகிக்கொள்...போனால் மீண்டும் வராது...இதுவரை கிடைக்காத வாழ்க்கைப் பாடம்...

கிடைத்த தனிமையும்
பிடிக்க பழகிக்கொள்...
போனால் மீண்டும் வராது...
இதுவரை கிடைக்காத
 வாழ்க்கைப் பாடம்...
புதிய அத்தியாயத்தை 
புதிது புதிதாக 
புத்தாக்கம் செய்யும்!
சிந்தைக்குள் எல்லோரும் வருவர்...
யார் யார் இவர்கள்?
தெளிவான அலசல்
புரியவைக்கும் இந்தத் தனிமை!
பட்ட மரத்தோடு 
உன்னை ஒப்பீடு செய்யும்...
நிழலுக்கு இளைப்பாரியவர்கள்
நிஜ வாழ்க்கையில்
எங்கோ ஒரு புள்ளியாய் 
தெரிந்தும் தெரியாமல் 
நம்மைக் காயப்படுத்தும்
கோடாரிக் காம்புகளாகக் கூட இருக்கலாம்!
சுயநலம் காணாத பச்சை மரம்
யாரையும் வேறுபடுத்துவதில்லை...
ஒரே மாதிரியான நிழல்
ஒரே மாதிரியான பூக்கள்
ஒரே மாதிரியான கனிகள்
மனிதன் தான்
தரம் பார்த்து பார்த்து
தனது தகுதியை இழக்கிறான்.
புரிய வைத்த தனிமைக்கு நன்றி..
தனிமை கூட நல்லதே!

நுதல்விழி
இராணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...