Saturday, December 21, 2024

பஞ்சத்தின் வறண்ட பூமிஏழைகளின் உடலின் வடுக்கள்பாலம் பாலமா நீட்டிருக்குஎலும்புகளின் கூடு!

பஞ்சத்தின் வறண்ட பூமி
ஏழைகளின் உடலின் வடுக்கள்
பாலம் பாலமா நீட்டிருக்கு
எலும்புகளின் கூடு!
சுற்றிலும் நீர் வழியில்லை வாழ்வதற்கு
பசுமையின் மத்தியில் தவம் கிடந்தாலும்
பிழைக்க விடுவதில்லை
முதலை முதளாளிகளின் ஆதிக்கம்!
கண்ணாடி அறைக்குள் 
வண்ண வண்ண குப்பிகளில்
அடைக்கப்பட்ட நஞ்சு விலையாகிறது!
ஆரோக்கியம் தரும் இயற்கை இளநீர்
குப்பையாய்க் கிடக்கு சாலைகளில்!
நாங்களும் மனிதர்கள்
விழவிடாமல் வாழவையுங்கள்
அழவிடாமல் வாழவிடுங்கள்!
குளிர்காலத்திலும் ஏழையின் வயிறு
அனலூட்டப்பட்ட அடுப்பாக மாறலாமா?
சாலையோர மக்களின் வாழ்க்கையை
பாலைவனமாக மாற்றலாமல்
சோலையாக மாற்றலாமே!

நுதல்விழி
இராணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...