Saturday, December 21, 2024

சொல்லிவிடு ஒருமுறை

சொல்லிவிடு ஒருமுறை....

ஒருவரில் ஒருவர் வாழ்கிறோம்
ஒவ்வொரு கணமும் கணக்கிறது 
கனவுகள்+ கற்பனைகள்
முட்டி மோதி முதலில் உரைப்பது யார்?
மௌனம் சாதித்து ஏமாற்ற போகிறோமோ?
விழியே நீயாவது சொல்லிவிடு காதலை...
மொழியே நீயாவது  உரைத்துவிடு காதலை...
காத்திருக்கும் தவிப்பில் இதயத்துடிப்பு
நொடிக்கு நூறுதரம் தாறுமாறாய் தரம்புரள்கிறது!
காதல் விபத்தில் சின்னப்பின்னா நிலை வேண்டுமா
செல்லமே நீயாவது சொல்லாமல் சொல்லிவிடு
உன் காதலை...

நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...