Saturday, December 21, 2024

கசங்கிப் போட்ட காகிதங்களில்காதலில் தோய்ந்த கவி வரிகள்

கசங்கிப் போட்ட காகிதங்களில்
காதலில் தோய்ந்த கவி வரிகள்
கலங்கிய இதயச் சிதறல்கள்
சொல்ல முடியாத உள்ளுணர்வுகள்
தவிர்க்க முடியாத மோக தாகங்கள்
கற்பனைக்கும் எட்டாத கருத்துகள்
அளவில்லா ஆனந்த நினைவுகள்
அடக்கமட்டாத துயரின் வடிவங்கள்
ஒவ்வொன்றும்
எறிந்தவர் மனநிலையின்
ஆராய்ச்சிக் கூடம்
பிரிக்கப்படும் காகிதங்களில்...

நுதல்விழி
இராணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...