Saturday, December 21, 2024

சித்திரை நிலவேநித்திரை கலைத்தவளே!கத்திரி வெயில் போலகண்ணால சுட்டெரிக்காதே!

சித்திரை நிலவே
நித்திரை கலைத்தவளே!
கத்திரி வெயில் போல
கண்ணால சுட்டெரிக்காதே!

கண்களால் நுழைத்து
இதயத்தில் இடந்தந்து
புத்திக்குள் புதைத்து
சித்தத்தில் கலந்தவளே!

எண்ணிரண்டு வயதிலிருந்தே
கண்ணிரண்டில் கட்டிப்போட்டு...
நுண்ணிடையின் இரகசியத்தில்
பெண்ணிடைப் பேரழகியே!

கள்ளச் சிரிப்பிலே
உள்ளத்தைக் கொள்ளையடித்து
வெள்ளை மனசுக்காரனை
தள்ளிவிடப் பார்ப்பதா!

விரித்த இதழ் இரண்டில்
விவரிக்க முடியாத விசித்திரமே¡
உரித்த நாராய் கிடக்கேன்
உன் நினைப்புக் கிடங்கிலே!

அலை அலையாய் கூந்தலில்
அலைய விட்டுப் பார்ப்பதேன்!
கலைமானே கண்டுகொள்
மலைப்பில் நிற்கும் என்னை!

நுதல்விழி
இராண்ப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...