Saturday, December 21, 2024

மைய விலக்கு விசை வேகம் குறைய குறையமையத்தில் தடுமாற்றம் தலைச் சுற்றி தரையில்!

மைய விலக்கு விசை
      வேகம் குறைய குறைய
மையத்தில் தடுமாற்றம்
      தலைச் சுற்றி தரையில்!

இறுக்கத்தில் ஏற்பட்ட தளர்வு
கலக்கத்தில் (மயக்கத்தில்) விழுந்தது
தரையில்!

உடல் நழுவிய மூக்கணாங்கயிறு
தாங்கிங்கொள்ள வழியில்லை
சுருண்டது தரையில்!

நழுவிய தாலியால்(கயிறு)
கலங்கிய மனைவி(பம்பரம்)
மயக்கத்தில் தரையில்!

நுதல்விழி
இராணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...