கோவம்தனை விட்டுவிடு...
குனிந்த பாசாங்கு போதும்
கொஞ்சம் நிமிர்ந்து நோக்கு...
முடிக்கப்பட்ட கோலத்திற்கு
முந்நூறு முத்தங்கள் விரல்களால்....
அலங்காரப் பேரழகே
அலங்கரித்த கோலம் போதும்....
முனகிக் கொண்டிருக்கும் என்னே....
முகம் பாராமலே,
முகம் சுளிப்பதா?
தப்போ தவறோ செய்திடின்...
தண்டிக்கும் தேவதையே....
கொஞ்சம் மன்னிக்கவும் வேண்டுகிறேன்!
மௌனமாகக் கொன்றது போதும்...
மோகமாய் சற்றே நோக்கு!
வறண்ட என் முகத்தில்
வளமை வந்து சேரட்டும்!
கால் வலிக்க காத்திருப்பிற்கு
காதல் அம்பால் மருந்து விடு....
நெஞ்சுபடும் பாட்டிற்கு
கொஞ்சு மொழி பேசிவிடு....
கெஞ்சித்தான் நிற்கிறேன்
ஒற்றைக்கால் தவத்தில்..
மிஞ்சித்தான் போகிறாய்
ஊடலில் ஊமையாக...
நோகுதடி என் இதயம்...
போதுமடி உன் குறும்பு!
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment