கசங்கி யாவது வாழ்கிறேன்...
வாசனை திரவியமாக!
மனதை மயக்கும்
மணம் கொண்டு வாழ...
துர்நாற்றத்தை விலக்கி
நல்நாற்றம் வழங்க...
குப்பிக்குள் அடைபட்டாலும்
குளுகுளுக்க வைக்கிறேன்...
தூரத்தில் இருந்தாலும்
எனது அடையாளத்தைப் பதிக்கிறேன்....
உதிர்ந்து உயிர்விடுவதைக் காட்டிலும்
பறிக்கப்பட்டு பாக்கியவான் ஆகிறேன்!
இப்படிக்கு
மடிவதற்குள் மன(ண)ம்விட்டு
கமகம நாற்ற மலர்!
No comments:
Post a Comment