Saturday, December 21, 2024

காதல் பைத்தியம்

காதல் பைத்தியம்

முகம் அறியா அவன்
முழுமதி இரவில் 
முழுதாய் என்னைக் களவாடிய கள்வன்...

முன்னவனாய் நின்றது நிழல்
பின்னவனாய் நின்றது அவன்
என்னவனாய் இருக்க
மன்னவனாய் வருவானா?

கடிதாய் வந்தான்
எளிதாய் இருந்தான்
இயல்பாய் பேசினான்
முழுதாய் மறந்தேன் என்னை!

நிற்க முடியாமல்
திகைத்தே போனேன்
எப்படி நடந்தது
என்னுள் மாற்றம்!

உணவைத் தவிர்த்தேன்
உறக்கம் தொலைத்தேன்
கனவே இல்லை
கற்பனையில் வாழ்ந்தேன்!

வெட்கப்பட்டேன்
தலைகுனிந்தேன்
தனுக்குத் தானே பேசிக்கொண்டேன்
நினைவில் நின்றவன்
எங்கே காணோம்!

நகமும் தீர்ந்து
விரலைக் கடித்தேன்
நின்ற இடத்தில் விரலில் கோலம்
அழைக்கும் குரல்தான் கேட்டவில்லை
அடிப்பட்ட பின்னே அதிர்ந்து போனேன்!

அலமாரி ஆடைகள்
கட்டிலில் கிடக்க
அலங்கோலமானது அறையும் தானே!
எதைத்தான் அணிவது
கலைத்துப் போட்டேன்
எடுத்தது எல்லாம் நல்லாவே இல்லை!

வட்டப் பொட்டு வடிவழகா
நீட்டு பொட்டு நிஜவழகா
பிறை பொட்டு மறையழகா
பூப்போட்ட பொட்டு பொலிவழகா!

காதோடு கதை பேசும்
தோடழகா
என்னோடு தலையாட்டும்
தொங்கட்டானழகா!

கலகலக்கும் கண்ணாடி வளையலா
பளபளக்கும் கல் வளையலா
வண்ண வண்ண வளையலா
ஒற்றை வளையலே போதுமா?

துளைக்கும் கேள்வியில்
துடியாய்த் துடிக்கிறேன்
முளைத்த காதலில்
முள்ளாய் சுகங்கள்!

முட்டுச் சந்தில் முட்டிக்கொண்டேன்
தட்டுத் தடுமாறி நிலையை அறிந்தேன்
படிப்பில் கூட நட்டம் இல்லை
நடிப்பில் கட இப்படி நடக்குமா?

என்னன்னவோ உளருகிறன்
எண்ணத்தான் முடியவில்லை
என்னத்தை சொல்வது என்னை....

நுதல்விழி
இராணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...