தனிமைத் தவிப்பு
தேக்கி வைத்த ஆசைகளை
தாக்கி விட்டுச் சென்றதென்ன?
ஆக்கி வைச்ச சோறுதண்ணி
தீக்கு இரை ஆவதென்ன?
தூக்கி வைத்து கொஞ்சியது
பாக்கி விட்டுச் சென்றதென்ன?
நோக்கி நின்ற கண்கள்
ஊக்கி போல குத்தலென்ன?
போக்கி கழித்த காலங்கள்
நீக்கிச் சென்ற நினைவுகள்!
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment