செக்கச் சிவந்த வானோடு
செம்மலர்களின் வரவேற்பு...
வானின் எதிரொளிப்பில்
மலர்களின் வண்ணங்களா?
வண்ண மலர்களின் எதிரொளிப்பில்
வானம் சிவந்ததோ!
ஒன்றுக்கொன்று விஞ்சியே நிற்கின்றன
அழகுப் போட்டியல்...
சிரிக்கும் மலர்களுக்கு முன்னே
கதிர்களை பரப்பி
ஆரத்தழுவி வரவேற்கும் வானம்!
கதிர்களைப் பரப்பி
ஆரத்தழுவும் வரும் ஆதவனுக்கு
கண்பட்டு விடக்கூடாதென்று
மண்மகள் ஆரத்தி தட்டே
செம்மலர்கள்!
நுதல்விழி
இராணிப்பேட்டை
நன்று
ReplyDeleteகடைசியில் வரும் நான்கு வரிகள் மிகவும் அற்புதமான ஒன்று!!!
ReplyDelete