Monday, December 16, 2024

போதும் இந்த மௌனம்


போதும் இந்த மௌனம்

மௌனமாகவே கடந்து செல்கிறாள்
எதிர்கொள்ளும் போதெல்லாம்...
வார்த்தைகளுக்கு வழியில்லை
வாழ்க்கைக்கு நான் வழி...
சமாதானம் சொல்கிறது
நிதானத்தில் என் மனம்...
நின்று கேட்க முடியவில்லை...
நிஜமும் நிழலும்...
காத்திருக்கேன் கண்மணியே....
கடைக்கண் திறவாய்
ஒருசொல் மொழிவாய்
என் பின்னால் வருவேனென்று
ஒருதலைக் காதலில்
உருகும் மெழுகாய்...
அழுகிறேன் மனத்திடே...
ஆறுதல் தர வருவாய்
மூடிய மனக்கதவைத் திற;
கனவு வரட்டும்....
கனவிலாவது நான் வருகிறேன்
சொல்விடு உன் காதலை...

நுதல் விழி 
இராணிப்பேட்டை

2 comments:

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...