இருளிலும்
ஓர் அடி முன் வை...
பாதையே இல்லா விட்டாலும்
இயற்கையும் உனக்கு
ஒளி காட்ட ஓடிவரும்!
பாதையும் வழிகாட்டி நிற்கும்!
பொன்னொளி கதிர்கொண்டு அழைக்கும்!
முட்பாதை பூப்பாதை ஆகும்!
கடந்து வந்த கடினங்கள்
காணாமல் போகும்!
எதிர்வரும் காலங்கள்
உனக்கானதாகும்!
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment