Tuesday, December 10, 2024

பாரதிக்கு ஒரு வாழ்த்துப்பா


 பாரதிக்கு ஒரு வாழ்த்துப்பா


செந்தமிழ்த் தேனீ அவனுக்கு

சந்தத்தமிழ்ப் பாட்டு என்னால் முடிந்தது!


மற்போர் புரியவில்லை, ஆனால்

விற்போர் புரிந்தவன் சொற்கனைகளாலே!


பாட்டுக்கொரு புலவன் என்

பாட்டுடைத் தலைவன்

நாட்டுடமை யாக்கப்பட்ட நம்

நாட்டின் நாயகன்!


நலன்மிகு கவி புனைந்த 

நல்லத் தலைவன்!

வலம்மிகு உள்ளம் கொண்ட

வல்லமை வீரன்!


பாதுகாக்கப்பட வேண்டிய பாரதியை

பதுங்க வாழ விட்டோமே...


நீடுதுயில் நீக்க பாடிவந்த நிலவே

நீங்கா இடம் பிடித்தாய்

பாரினில் தன்னில்!


ஆடுவோமே பள்ளு பாடுவோமே பாடி

நாட்டிடே சுதந்திர தாகத்தைத் தூண்டியவன்!


ஆடுகிறான் மக்கள் மனதில்

பாடப்படுகிறான் பஞ்ச மில்லாமல்!


நெஞ்சுப் பொறுக்க வில்லையே 

அஞ்சிய மானிடர்களை நினைக்கையில்....


பஜனையில் கண்ணனைப் பாடி

கஜேந்திர மோட்சம் கொண்டான்!

1 comment:

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...