வண்ணத்துப் பூச்சிக்கு
பசலை படர்ந்ததோ
மாமை மறைந்து
மஞ்சள் படர்ந்து
வருத்தத்தில் கிளையா? விரலா?
மாறுபாடு அறியாமல்
மயங்கித்தான் அமர்ந்ததுவோ?
தன் சோகம் மறக்க
அவளின் இளர்தளிர் விரல்கள்கள்
வீணையென மீட்டிட
இராகம் ஒன்றை எழுப்பிட
ரீங்காரம் இசைத்ததோ?
மென்பஞ்சு விரல்கள்
காந்தள் மலரென
மையலில் வீழ்ந்து
மகரந்தச் சேர்க்கைக்கு
மன்றாடல் புரிந்ததுவோ?
வாசமில்லா மலரில்
வந்து அமர்ந்து சென்றதோ?
வசந்த மகள் கைவிரலின்
வாசம் அழைத்து வந்ததுவோ?
நுதல்விழி
இராணிப்பேட்டை

அருமை
ReplyDeleteநன்று
ReplyDeleteநன்றி
Deleteகாதல்மயக்கம் தரும் கவிதை
ReplyDeleteஅருமை..அருமை
வண்ணத்துப்பூச்சி மயங்கியதோ
இல்லையோ
உங்கள் கவிதை வாசிப்பவனை
கிறங்க வைக்கும்
பெண்களின் விரல்கள் தான்
வர்ணிக்கும் அழகு வாய்ந்தவை
கிளையா? விரலா?
வீணையின் தந்திக் கம்பிகளா?
காந்தள் மலரா?
காதலியின்
விரல்களின் வாசத்தை
உங்கள் கவிதையில்
இறக்கி வைத்து இருக்கிறீர்கள்
வாழ்த்துகள் தோழர்
" மென் பஞ்சுவிரல்கள் காந்தள் மலரென மையில் வீழ்ந்து " தங்களின் உவமை கவிஞர் என பறைசாற்றும்!
ReplyDeleteஅற்புதமான படைப்பு.
ReplyDelete