Saturday, November 23, 2024

திறந்த பேனாவாய் மூடி இல்லை... மறந்து போன நீ போனது எங்கே?

 


திறந்த பேனாவாய்

மூடி இல்லை...

மறந்து போன நீ

போனது எங்கே?


உயிர் பிரியும் நேரம்

என் நினைவு இல்லையா?

உடலுக்குத் தான்

விடை தந்தான்...


உயிருக்கு இல்லை..

உணர்வு இறந்த 

பட்ட மரமாய்

உயிரோடு உலவுகிறேன்...


இப்பாவ பூமியில்....


16 comments:

  1. திறந்த பேனாவாய்
    மூடி இல்லை...
    மறந்து போன நீ
    போனது எங்கே? - அருமையான வரிகள். வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. அங்கொரு
    பிளாக்கில்
    இதே கவிதையை
    அவரும் பதிவிட்டாராம்
    தோழி.
    இணையும் புள்ளியும்.
    இணைக்கும் புள்ளியும்
    எதுவென
    காணுவதில்தான்
    கழிகிறது
    வாழ்க்கை.
    காணாத ஒன்றாக
    எப்பொழுதும்.
    வாழ்த்துகள்.
    நன்றி

    ReplyDelete
  3. உள்ளத்தை உருக்கும் வரிகள்

    ReplyDelete
  4. Poorippa irukku neenga katrathum kandanthathum.

    ReplyDelete
  5. மனமும் உடலுமாக
    பேனாவும் முடியும்
    மூடி தொலைந்து போனாலும்
    பேனா தன் முள்ளால்
    எழுதுவதை நிறுத்துவதில்லை

    ஆகச்சிறந்த கவிதை
    வாழ்த்துகள்

    தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள்
    கவிதைகள் செம்மை பெறும் தோழர்

    ReplyDelete
  6. வலிகளின் வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை

    ReplyDelete
  7. வாழ்த்துகள்

    ReplyDelete
  8. அருமை வரிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. திறந்த பேனாவாய்.... துயரத்தின் உச்சம்...இளகிய மனம் படைத்தோர் உள்ள குமுறல்!

    ReplyDelete
  10. வலி மிகுந்த வலிமையான வரிகள்!! வாழ்த்துகள்!!

    ReplyDelete

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...