Saturday, November 23, 2024

ஊதாப் பூவில்


ஊதாப் பூவில்

ஏதோ ஒன்று

தோதாய் வந்து

தூதாய் நின்று

நீதான் எனக்கு

காதல் சொல்ல...

போதா அன்பில்

மோதா காதல் முட்டிக்கொள்ள...

பேதை நெஞ்சம்

கீதம் பாடிடுமே!


நுதல்விழி

இராணிப்பேட்டை


2 comments:

  1. ஊதாப் பூவில்
    ஏதோ ஒன்று
    தோதாய் வந்து
    தூதாய் நின்று - நல்ல ஓசை நயம். வாழ்த்துகிறேன். சிறப்பு.

    ReplyDelete
  2. துள்ளல் ஓசையில் துள்ளிவருகிறது
    காதல் கவிதை
    சிறப்பு

    ReplyDelete

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...