Saturday, November 23, 2024

ஒருதலைக்காதல்

 ஒருதலைக்காதல்



மனசுக்குள் இருப்பதை

மனம்விட்டு பேசிவிட்டால்

இழப்புகள் ஏராளம்

எத்தனை இழப்புகளை இழந்தாலும்

உனது இழப்பை மட்டும்

உதறிட மாட்டேன்!

சிறை வைக்கப்பட்ட

எனது ஆசைகள்

எப்போதும் ஆயுள்கைதியே!

நான் மரணிக்கும் போது

அதுவும் மரணிக்கும்!


நுதல்விழி

இராணிப்பேட்டை



2 comments:

  1. எனது ஆசைகள்
    எப்போதும் ஆயுள்கைதியே! - தேர்ந்தெடுத்த சொற்கள். வாழ்க.

    ReplyDelete
  2. அருமை
    கவிதையின் கடைசி வரியில்
    கவிதை உயிர்ப்பித்திருக்கிறது
    வாழ்த்துகள் தோழர்

    ReplyDelete

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...