அவளும் நானும்
விழி நான்கும் சந்திக்க
பேசுகின்ற மொழி
மௌனம்!
தடுக்கி விழும்போது
தாங்கியது கரங்கள் அல்ல
இதயம்!
பாரம் வலியைத் தர
எனக்கு மட்டும் சுகமானது
அவளின் நினைவுகள்!
சந்தித்தப் போது
சிந்திக்க மறந்தது
வீழ்ந்தேன் காதலில்!
மோதலில் விளைந்த காதலில்
அவள் திட்டிய சொற்கள்
மோன ராகமே!
தேடலில் கிடைத்த புதையல்
அழகு ஓவியம்
அவள்!
சிக்கித் தவித்தேன்
அவளைக் கண்ட பின்...
காதலில்!
உறக்கும் தொலைத்தேன்
கனவில் மட்டும் தொடர்வதால்....
நினைவில் வருவாளா?
புரியாத மொழிகளிலும்
அர்த்தம் தேடினேன்
அவள் பெயர்!
தேய்வதேயில்லை என் மனவானில்
நீங்கா நினைவில்
முழுமதி அவள் முகம்!
செல்லரிக்கா என் மனதில்
புல்லரிக்கும் காவியம்
அவள் பெயர்!
மொழி கற்ற குழந்தையின்
முதற்சொல் பிதற்றல் போல்
ஓயாது அவள் பெயர்!
ஓயாத அலை மோட்சத்தை அடைய
தீண்டத் துடிப்பது
அவள் பாதகமலங்களை!
நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்

தடுக்கி விழும்போது
ReplyDeleteதாங்கியது கரங்கள் அல்ல
இதயம்!
------------
செல்லரிக்கா என் மனதில்
புல்லரிக்கும் காவியம்
அவள் பெயர்! - அழகான வரிகள். வாழ்த்துகிறேன்.
தேய்வதேயில்லை என் மனவானில்
ReplyDeleteநீங்கா நினைவில்
முழுமதி அவள் முகம்!
அருமை, தேயாத நிலா!
நன்றி அம்மா
Deleteகுறுங்கவிதைகளால் இணக்கப்பட்ட
ReplyDeleteகாதல் கவிதை
அருமை
மொழிகற்ற குழந்தையின்
முதற்சொல் பிதற்றல் போல்
ஓயாது அவள் பெயர்
மிகவும் ரசித்த வரிகள்
வாழ்த்துகள் தோழர்