Saturday, November 23, 2024

தோற்றுப் போகும் வார்த்தைகள்

தோற்றுப் போகும் வார்த்தைகள்


மூழ்கிப் போன

காகிதக் கப்பலுக்கு

முக்கிமுக்கி அழுது

அது போல் வேண்டாம்...

அதே தான் வேண்டும்...

உருண்டு புரண்டு

அடம்பிடித்து

அடிவாங்கி தூங்கிப்போய்...

நேற்று நடந்தது அத்தனையும் மறந்து

அன்றலர்ந்த மலர் போல்

அன்றைய அமர்க்களத்திற்கு

ஆதாரத்தைத் தேடும்

மழலை வாழ்க்கை

இனி வருமா?


வாழ்க்கைப் பயணத்தில்

சுமந்து சென்ற கப்பல்

கவிழ்த்து விட்ட நிலையில்

துடுப்பாவது பிடித்துக்கொண்டு

ஏதாவது ஒரு கரையில்

கரைசேரும் போது,

அடுத்து என்ன?

பதட்டத்தில் துடிப்பு தேடும் மனம்?

நிதானத்தில் செயலற்றுப் போகிறதே?


என்றோ ஒருநாள் வருகின்ற

கப்பலுக்காக காத்திருப்பு!அடிப்படை ஆகாரங்களை 

சேமித்தல்....

இனி என்ன செய்யப்போகிறோம்?

இக்கணமே கடலில் வீழ்ந்து

விட்டுவிடு உயிரை!

அவசரத்தில் வாழ நினைத்த மனம்

நிதானத்தில் வீழ நினைக்கிறதே?


நுதல்விழி

இராணிப்பேட்டை மாவட்டம்
தொடர்பு எண்: 9551527618
மின்னஞ்சல் முகவரி: mohanavelkomala@gmail.com 

6 comments:

  1. அருமை அருமை. வாழ்த்துகிறேன். நிறைய எழுதுங்கள். எழுதியதை மீண்டும் மீண்டும் நீங்களே படியுங்கள். கவித்துவம் இன்னும் வசப்படும். ஒரு சில தட்டச்சுப் பிழைகள் உள்ளன. விரைவில் நூலாக்குங்கள். நூலாக்கத்திற்கு உதவி தேவைப்படின் தயங்காமல் கேளுங்கள். +6590044526

    ReplyDelete
  2. நிதானப்படுதலில்தான் உயிர்க்கிறது
    வாழ்க்கை.
    வீழ்ந்து விடுங்கள்.
    நிதானத்தின்
    நிதர்சனத்தில்.
    நன்றி
    வாழ்த்துகள்
    வாழிய
    நலம்.
    சூழ.
    நன்றி

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அருமையான கவிதை
    பால்ய்த்தின் தொலைந்த சாவிகளை
    தேடுகிற மனம்

    எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு

    ஐயன் வள்ளுவன் வழிகாட்டிச் சென்றுள்ளான்
    சிறப்பான கவிதை
    வாழ்த்துகள் தோழர்

    ReplyDelete
  5. எழுதலாப் பிழையில் அவசரத்தில் வாழ நினைத்த மனம் நிதானத்தில் வீழ்கிறதோ.... துயரமான வரிகள்.....!?!?

    ReplyDelete

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...